அட்லீ யின் 'ராக்கா' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி? அல்லு அர்ஜுனுக்கு வில்லியா?
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கா
ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கி வரும் 'ராக்கா' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.

மேலும், மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியாக ஐஸ்வர்யா
இந்நிலையில், ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் 'ராக்கா' திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் கமிட்டாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி பிளாக்பஸ்டர் ஆனது.
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி News Lankasri
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம் News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu