ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
ஐஸ்வர்யா லட்சுமி
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். ஆனால், தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது என்றால் அது பொன்னியின் செல்வன் படம்தான். இப்படத்தின் பூங்குழலி எனும் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இதை தொடர்ந்து கட்டா குஸ்தி படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக பட்டையைக் கிளப்பினார். கடைசியாக இவர் நடித்திருந்த மாமன் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
வருத்தத்தில் ரசிகர்கள்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சமூக வலைதளத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்ததை கொடுத்துள்ளது.
