தனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த கூடாது.. ஐஸ்வர்யா ராய் பரபரப்பு வழக்கு!
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் என தமிழில் அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வருகிறார். இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
பரபரப்பு வழக்கு!
இந்நிலையில், ஐஸ்வர்யா தற்போது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தற்போது தொடர்ந்துள்ளார்.
அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார். பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
