பள்ளியில் இருந்து லீக் ஆனதா ஐஸ்வர்யா ராய் மகள் வீடியோ? அபிஷேக் விளக்கம்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். வழக்கமாக ஸ்டார் கிட்ஸ் என்றாலே ஒரு சின்ன போட்டோ வெளியில் வந்தால் கூட பெரிய அளவில் வைரல் ஆகிவிடும்.
ஆராத்யா பச்சன் வீடியோ
சமீபத்தில் ஆரத்யா பச்சன் பள்ளி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது. மேலும் ஆராத்யா ஹிந்தி poem சொல்லும் ஒரு வீடியோவும் வைரல் ஆனது.
அது இணையத்தில் வைரல் ஆகி பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆராத்யாவுக்கு கிடைத்து வரும் அன்பு பற்றி குறிப்பிட்டு அபிஷேக் பச்சன் நன்றி கூறி உள்ளார்.

பள்ளியில் இருந்து லீக் ஆனதா?
வைரல் ஆன வீடியோ பள்ளியில் இருந்து லீக் ஆகவில்லை என அபிஷேக் விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "அந்த வீடியோ பள்ளியில் இருந்து லீக் ஆகவில்லை, ஆராத்யா வீட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் போட்டோ எடுக்க தொடங்கிவிடுகிறார்கள். அதை பற்றி வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என கூறி உள்ளார்.