கணவரை விட அதிக சொத்து மதிப்பு.. இத்தனை கோடி வைத்துள்ளார ஐஸ்வர்யா ராய்!
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்ற பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விட மூன்று மடங்கு அதிக சொத்துக்களை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உலக அழகியானபின் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அதிக படங்கள் நடித்தார்.
தமிழில் அவ்வப்போது தலைகாட்டி சென்றாலும், இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சொத்து மதிப்பு
ஐஸ்வர்யா ராய் பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்து கொண்டு அதன்மூலம் பல கோடி சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார் . ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 10 கோடி வசூலிப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் பிராணட்களின் விளம்பர படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு மட்டுமே 6 முதல் 7 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் இதன்மூலம் ரூ. 862 கோடி சொத்துகளை வைத்துள்ளாராம்.
ஆனால் கணவர் அபிஷேக் பச்சன் சொத்து மதிப்பு ரூ. 280 கோடி மட்டுமே அதாவது ஐஸ்வர்யா ரையை விட மூன்று மடங்கு கம்மி என கூறப்படுகிறது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
