கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன? அவரே கூறியுள்ளார் பாருங்க

By Kathick Mar 11, 2025 07:00 AM GMT
Report

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகிறார்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவரும் இணைந்து குரு, தூம் 1 மற்றும் 2, Kuch Naa Kaho, Dhaai Akshar Prem Ke உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன? அவரே கூறியுள்ளார் பாருங்க | Aishwarya Rai Rejected To Act With Her Husband

ஆனால், ஒரே ஒரு திரைப்படத்தில் தனது கணவருடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். ஃபரா கான் இயக்கத்தில் உருவாகி 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஹாப்பி நியூ இயர்.

இப்படத்தில் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், சோனு சூட், போமன் இரானி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்யை கேட்டுள்ளனர். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன? அவரே கூறியுள்ளார் பாருங்க | Aishwarya Rai Rejected To Act With Her Husband

ராஷ்மிகா, ஸ்ரீலீலா மார்க்கெட்டுக்கு ஆபத்து.. அடுத்த சென்சேஷனல் இந்த நடிகை தான்

ராஷ்மிகா, ஸ்ரீலீலா மார்க்கெட்டுக்கு ஆபத்து.. அடுத்த சென்சேஷனல் இந்த நடிகை தான்

மறுப்பு தெரிவித்த நடிகை

இந்த நிலையில், எதற்காக மறுப்பு தெரிவித்தேன் என்பது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன? அவரே கூறியுள்ளார் பாருங்க | Aishwarya Rai Rejected To Act With Her Husband

இதில் "சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட இப்படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். நானும் இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், படத்தில் எனக்கு அபிஷேக் பச்சனுக்கும் சங்கடமான சில சூழல்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கு பதிலாக, நான் வேறு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியிருந்தது. இந்த தர்மசங்கடமான சூழலை தவிர்க்கவே அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்" என கூறியுள்ளார்.

கணவருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன? அவரே கூறியுள்ளார் பாருங்க | Aishwarya Rai Rejected To Act With Her Husband

ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில், இப்படத்தின் வாய்ப்பை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார். அவர் இந்த வாய்ப்பினை மறுக்கவே, தீபிகா படுகோன் ஹீரோயினாக இப்படத்தில் நடித்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US