18 வயதில் நடிகை ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய்.
இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதன்பின் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி துவங்கி பல படங்களில் நடித்து வந்தார்.

ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மேலும், தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
18 வயதில் வாங்கிய சம்பளம்
நடிக்க வருவதற்கு முன், தனது 18 வயதில் ஐஸ்வர்யா ராய் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 1,500 சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.
