200 கிலோ நகைகளை அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய்.. பாதுகாப்புக்கு இத்தனை பேரா
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட்டிலும்தான் இவருக்கு பட வாய்ப்புகள் குவித்தன.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் என அவ்வப்போது மட்டுமே தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டி வந்தார். ஆனாலும் கூட இங்கு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
200 கிலோ நகை
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவரும் அறிந்த விஷயம்தான். அப்படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அவர் அணிந்து நடித்தாராம்.
அந்த நகைகளை இடை 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்துமே ஒரிஜினல் நகை ஆகும். இதனால் அதனை பாதுக்காக்க படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே ஐஸ்வர்யா ராய்யை சுற்றி பல காவலர்கள் இருப்பார்களாம்.