யாரை நம்புவது என்றே தெரியவில்லை - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் முன்னணி நடிகையானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் கைவசம் தற்போது துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் மற்றும் மோகன் தாஸ் போன்ற படங்கள் வெளிவரவிருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு செய்துள்ள துரோகம் குறித்து பேட்டி ஒன்றில் கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியவராவது :
" ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைபற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே , எனக்கு மிகவும் நம்பிக்கையான நபர் ஒருவர் இதுமாதிரியான செயலை செய்துருக்கிறார்.
அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள் என்ன இருந்தாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன்.
என்னை போல் மற்றவர்களுகும் எதுவும் இதுபோன்ற துரோகங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன். எனவே யாரை நம்புவது யாரை நம்மக்கூடாது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை " என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடையை வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
