லால் சலாம் பிறகு அடுத்து படத்திற்கு தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... வெளிவந்த விவரம்
ஐஸ்வர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் என்ற பெருமையோடு தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
3 என்ற படத்தை முதன்முதலாக இயக்கி வெற்றியை கண்டார். அப்படத்திற்கு பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார், ஆனால் இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
அப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய படம் லால் சலாம்.
ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் என பலர் நடிக்க வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

புதிய படம்
இந்த நிலையில் சிறிய இடைவேளைக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை லாக் செய்துவிட்டார்.
சமீபத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தான் ஐஸ்வர்யாவின் புதிய படத்தை தயாரிக்கிறாராம். அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri