சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்து அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர், மேலும் அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யா இயக்குநராக வை ராஜா வை திரைப்படத்தை இயக்கியிருந்தார், அப்படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
நட்சத்திர குழந்தைகள்
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு ஈவண்ட்-ல் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நட்சத்திரத்தின் குழந்தையாக இருப்பதன் அழுத்தம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது “வெளியில் இருப்பவர்களை விட நட்சத்திர குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஏனெனில் மக்கள் எப்போதும் அவர்கள் மீது தங்களின் கண்கள் வைத்திருப்பார்கள்.
மேலும் திரைப்பட தொழிலில் நுழைந்தவுடன் அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள்” என பேசியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அதிக சம்பளம் வாங்கும் மூன்று முன்னணி நடிகர்கள்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
