மீண்டும் சோகத்தில் இருக்கிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. காரணம் 'Lover' தானா
ஐஸ்வர்யாவின் லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் மகள் என்பதையும் தாண்டி அவர் திரையுலகில் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென இப்படத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அயலான் - கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெளிவருவதால் தான் லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மற்றொரு புறம் சில தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என்கின்றனர். எது எப்படியோ தற்போது லால் சலாம் படத்தின் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர். ரஜினியை இப்படத்தில் மொஹிதீன் பாய் கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
போட்டிக்கு வரும் Lover
இந்நிலையில் லால் சலாம் படம் வெளிவரவிருக்கும் அதே நாளில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள லவ்வர் திரைப்படமும் வெளிவரவுள்ளது. ரஜினியின் லால் சலாம் படம் முன் லவ்வர் பெரிய படம் இல்லை என எண்ணிவிட முடியாது.
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஜெய் பீம், சில்லு கருப்பட்டி ஆகிய படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை மணிகண்டன் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் நடித்த குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த டாப் 10 சிறந்த தமிழ் திரைப்படங்களில் குட் நைட் இடம்பிடித்திருந்தது. மேலும் லவ்வர் படமும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஆகையால் லவ்வர் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகையால் கண்டிப்பாக லவ்வர் படத்தை எளிதாக என்ன கூடாது என திரை வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. பொங்கல் பண்டிகை அன்று அயலான் - கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் வந்தது. தற்போது மணி கண்டனின் லவ்வர் வந்து லால் சலாம் படத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
இது கண்டிப்பாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. எது எப்படியோ சூப்பர்ஸ்டார் படம் என்றால் கண்டிப்பாக கூட்டம் குவித்தான் போகிறது. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
