தங்க தட்டில் சாப்பாடு, மாணிக்க மோதிரம்- ஐஸ்வர்யா, உமாபதி நிச்சயதார்த்தத்தில் நடந்த ஸ்பெஷல் விஷயங்கள்
ஐஸ்வர்யா-உமாபதி
பிரபலங்களின் திருமணம் சினிமா ரசிகர்கள் வழக்கமாக பார்க்கும் ஒரு விஷயம் தான். நிறைய பிரபலங்கள் காதல் வெளியே தெரிந்துவிடும், மக்களும் அவர்களை வாழ்த்துவார்கள்.
ஆனால் சில பிரபலங்கள் காதலிப்பதே தெரியாது திடீரென திருமண புகைப்படத்தையோ, நிச்சயதார்த்த போட்டோவையோ வெளியிடுவார்கள்.
அப்படி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் பற்றி தகவல் வந்தது. அவர்களுக்கு அடுத்து இப்போது நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் காதல் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி உலா வந்துகொண்டு தான் இருந்தது.
நிச்சயதார்த்த ஸ்பெஷல்
கடந்த அக்டோபர் 28ம் தேதி அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.
நிச்சயதார்த்தத்தை கலர்புல்லாக நடத்திக் கொடுத்த ஈவென்ட் மேனேஜர் ஒரு பேட்டியில், பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார்.
மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது.
இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் லைட் பிங்கில் அடிக்காத கலராக அசத்தலாக உருவாக்கப்பட்டு இருந்தது.
நிச்சயதார்தத்துக்கு வந்த அனைவருக்கும் தங்கத்தட்டில் பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான டிஷ்களை செய்து விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினார்கள் என கூறியுள்ளார்.