பாலிவுட்டில் களமிறங்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! விவாகரத்துக்கு பின் அதிரடி

Aishwaryaa Rajinikanth Oh Saathi Chal
By Parthiban.A Mar 21, 2022 02:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு பிறகு ஹிந்தியில் படம் இயக்குவதாக அறிவித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் பயணி என்ற பாடல் ஒன்றை இயக்கி இருந்தார். அந்த பாடல் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது. தனுஷ் கூட அதற்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி இருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது பாலிவுட்டில் படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Oh Saathi Chal

ஐஸ்வர்யா இயக்கும் ஹிந்தி படத்திற்கு Oh Saathi Chal என பெயர் சூட்டி இருக்கின்றனர். அதன் போஸ்டர் ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த படத்தின் கதை an extraordinary true love story என ஐஸ்வர்யா குறிப்பிட்டு உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.

தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US