நடிகை ஐஸ்வர்யாவின் மகளா இவர்..! முதல் முறையாக தனது மகளை அறிமுகம் செய்த நடிகை
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் தான், நடிகை ஐஸ்வர்யா.
தன்னுடைய அம்மாவை போலவே திரையுலகை தேர்வு செய்த ஐஸ்வர்யா, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
தமிழில் 'நியாயங்கள் ஜெயிக்கும்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து ஐஸ்வர்யா நடித்து வந்த பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், ரஜினியின் நடிப்பில் வெளியான எஜமான் படம் இவருக்கு கைகொடுத்தது.
மேலும் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யாவுக்கு அன்னயா என்கிற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இதுவரை தனது மகளை மீடியா மூலம் அறிமுகம் செய்து வைக்காத ஐஸ்வர்யா முதல் முறையாக அவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..