நடிகை ஐஸ்வர்யா ராய் திருமண உடை இத்தனை லட்சமா.. எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது.
இதனால், தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த உடையின் விலை மட்டுமே ரூ. 75 லட்சம். அந்த அளவிற்கு இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
