அஜித்தின் பிரம்மாண்ட படத்தை இயக்கவிருந்த ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர்! சோகத்தை ஏற்படுத்திய தகவல்

Ajith Sachy
By Jeeva Jun 19, 2021 10:20 AM GMT
Report

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஐயப்பனும் கோஷியும், இப்படத்தை இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார்.

மேலும் அதே வருடம் ஜூன் மாதம் 18 இயக்குனர் சாச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதனால் திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது.

இந்நிலையில் இயக்குனர் சாச்சியின் மனைவி நடிகர் அஜித் சாச்சியை அழைத்து பேசியது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது " ஐயப்பனும் கோஷியும் படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித் சாச்சியை தொலைபேசியில் அழைத்து பேசினார். சாச்சியுடன் இணைந்து பணியாற்ற ஆசையாக இருப்பதாகவும் கூறினார். 

மேலும் சாச்சியும் அவருடன் இணைந்து தனுஷ்கோடி குறித்த பிரம்மாண்ட படத்தை தனது சிகிச்சைக்கு பின் இயக்க திட்டமிட்டு இருந்தார்.

அப்படம் சாச்சியின் கனவு திரைப்படம், அதனை பெரியளவில் உருவாக்க இருந்தார். ஆனால் அவரின் மறைவால் அது நடக்காமல் போய்விட்டது" என கூறியுள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US