பிரான்ஸில் திரையிடப்படும் அஜந்தனின் “பறவாதி” திரைப்படம்!

By Parthiban.A Jan 16, 2025 04:01 PM GMT
Report

பறவாதி திரைப்படமானது பாரிஸில் இயங்கி வரும் diamond house நிறுவனர் ரீகன் & உமா தயாரிப்பில் இயக்குனர் அஜந்தனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முழு நீள திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படமானது இலங்கை தேசத்தின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பு திரிகோணமலை எல்லை பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது. அன்றாட வாழ்வாதாரத்துக்கு வீதியோரங்களில் நின்று பழம் விற்கும் சிறுபிள்ளை தொழிற்சார் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அப் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வுகளை தேட முற்படுவதே இத்திரைப்படத்தின் சாராம்சம் ஆகும்.

பிரான்ஸில் திரையிடப்படும் அஜந்தனின் “பறவாதி” திரைப்படம்! | Ajanthans Paravaathi Screening In France 26Th Jan

இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாக அச்சமுகத்தில் வாழும் பிள்ளைகளே நடிகர் நடிகைகளாக மாறி திரையிலும் வாழ்ந்து இருக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னோட்ட அறிமுக விழாவில் அச்சமுக மக்கள் வருகை தந்து சிறப்பித்ததோடு இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரீச்சா நிறுவனத்தின் ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையா அவர்கள் அக் கிராம மக்களுக்கு நன்கொடை வழங்கியதுடன் எமது திரை துறை வளர்ச்சியில் அக்கறை கொண்டு எமது தொடர் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியதும் இத் திரைப்படத்தின் மூலம் எமக்கு கிடைத்த அங்கிகாரமாகவே அமைந்தது.

பிரான்ஸில் திரையிடப்படும் அஜந்தனின் “பறவாதி” திரைப்படம்! | Ajanthans Paravaathi Screening In France 26Th Jan

மேலும் பல கல்விமான்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலைஞர் என பலதரப்பட்டவர்களாலும் பாராட்டை பெற்ற பறவாதி திரைப்படமானது எதிர்வரும் 26/01/2025 ஞாயிறு பிரான்சில் அமைத்துள்ள megaraam (44 Avenue de la Longue Bertrane, 92390 Villeneuve la Garenne - RER -C -Bus- 137 - 166 - 177 - 178 - 261 Tram- T1) எனும் இடத்தில் 900 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் முதல்காட்சி காண்பிக்கப்படுகின்றது சிறப்பம்சமாகும்.

பிரான்ஸில் திரையிடப்படும் அஜந்தனின் “பறவாதி” திரைப்படம்! | Ajanthans Paravaathi Screening In France 26Th Jan

அந்தவகையில் ஈழத்தமிழர்களின் திரைதிரைத்துறை வளற்சிக்கு ஆதரவு தருமாறு திரைப்பட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US