அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கும் முக்கிய தமிழ் இயக்குனர்! யார் பாருங்க
இயக்குனர் அட்லீ ஜவான் படம் மூலமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் அடுத்து டிமான்டி காலனி பட புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஹிந்தியில் அறிமுகமாக இருப்பதாக செய்தி பரவி வருகிறது. அவர் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிமான்டி காலனி 2
அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த நிலையில், தற்போது டிமான்டி காலனி 2ம் பாகத்தை எடுத்து வருகிறார்.
இதில் அருள்நிதி. பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.