பட்ஜெட்டை விட பல மடங்கு செலவு.. சர்ச்சையில் கோப்ரா இயக்குனர்!
விக்ரம் அதிக எண்ணிக்கையிலான கெட்டப்பில் நடித்து வரும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்தது. இந்நிலையில் நேற்று ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக அறிவித்த இயக்குனர் பூசணிக்காய் உடைக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த ட்விட்டில் அனைவருக்கும் நன்றி கூறிய அஜய் ஞானமுத்து தயாரிப்பாளர் லலித்குமார் பற்றி ஒரு வார்த்தை கூடகுறிப்பிடவில்லை. போடப்பட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவு செய்து மூன்று வருடமாக வட்டியும் கட்டிக்கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் நன்றி கூட சொல்லவில்லை என பலரும் விமர்சித்தனர்.
தயாரிப்பாளர் டி.சிவா ட்விட்டரில் இயக்குனரை தாக்கி பேசி இருக்கிறார். "போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு அதை தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு அதை தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன்
— T Siva (@TSivaAmma) February 15, 2022
அதற்க்கு பதில் கொடுத்த அஜய் ஞானமுத்து "பட்ஜெட் அதிகமாக நான் காரணம் இல்லை, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. டீம் என்றால் அது தயாரிப்பாளரையும் சேர்த்து தான்" என கூறினார்.
"விக்ரமுக்கு நன்றி சொன்ன நீங்கள் ஏன் தயாரிப்பாளர் பெயரை குறிப்பிட்டு இருக்க வேண்டும்" என சிவா மீண்டும் கூற, "நான் வேண்டுமென்றே அவர் பெயரை விடவில்லை. தயாரிப்பாளர் மீதும், தயாரிப்பு மீதும் அதிகம் மரியாதை இருக்கிறது" என அஜய் ஞானமுத்து கூறி உள்ளார்.
@7screenstudio tk u ajay for ur reply. Whatever may be d rumours it can be discussed n Short out.Since u mentioned tks to chiyaan vikram u should mention producer name also. Hope u understand, accept n do it. Tk u all d best ?
— T Siva (@TSivaAmma) February 15, 2022