விக்ரமுடன் கோப்ரா ப்ரோமோஷனுக்கு வராத இயக்குனர்அஜய் ஞானமுத்து.. என்ன பிரச்சனை?
கோப்ரா ப்ரோமோஷனுக்கு வராதது ஏன் என இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
கோப்ரா
நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ரிலீஸுக்கு சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் விக்ரம் ஈடுபட்டு இருக்கிறார்.
சென்னை, திருச்சி, மதுரை, கேரளா, ஆந்திரா, பெங்களூரு என பல இடங்களில் கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்று வருகிறார்.

வராத இயக்குனர்
விக்ரம் உடன் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலியில் ஆகியோர் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் இயக்குனர் அஜய் ஞானமுத்து எதிலும் பங்கேற்க்கவில்லை. அது ஏன் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அவரே அது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் தான் கலந்துகொள்ளவில்லை, விரைவில் நானும் அவர்களுடன் கலந்துகொள்வேன் என தெரிவித்து இருக்கிறார் அஜய் ஞானமுத்து.
Apologies!! I shall be joining soon!! Caught up with the final works of the film !! But super happy seeing my amazinggggg team @SrinidhiShetty7 @mirnaliniravi @MeenakshiGovin2 @roshanmathew22 slaying it with our King #Cobra @chiyaan sir ?? https://t.co/bT4AiW1mDo
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) August 27, 2022
சினேகா மற்றும் பிரசன்னா வைத்த பார்ட்டியில் கலந்து திரையுலக நட்சத்திரங்கள் !