தல அஜித்தால் கைவிடப்பட்ட திரைப்படம்! பலரும் பார்த்திராத அன்ஸீன் போஸ்டர்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தல அஜித் நடிப்பில் சரண் கூட்டணியில் காதல் மன்னன், அட்டகாசம் படங்களுக்கு பின் உருவாகவிருந்த திரைப்படம் ஏறுமுகம்.
பின்னர் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. ஆனால் அப்படம் தான் பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினி என வெளியானதாகவும் கூறப்படுகிறது.