தன்னை வெறுப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் குறித்து தல அஜித்தின் கருத்து !
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், இவரின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்ததாக மீண்டும் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தல அஜித் திரைத்துறைக்கு வந்து 30 வருடங்களாகி உள்ளதால் தற்போது இது குறித்த அஜித் அவரின் ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் "ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையானவர்கள் ஆகிய மூவரும் ஒரே நாணயத்தின் வெவ்வேறு பக்கங்கள். நான் ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் 'வாழு வாழவிடு' " என அஜித் அவரின் ஸ்டைலில் ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
Mr Ajith Kumar's message on his 30th year in the film industry
— Suresh Chandra (@SureshChandraa) August 5, 2021
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar