விஜய்யின் இந்த ஹிட் பாடலை முதலில் கேட்டது நடிகர் அஜித் தானாம் !
தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
மேலும் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார், தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா, A.L.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனிடையே இயக்குனர் A.L.விஜய் தலைவா படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தலைவா படத்தில் விஜய் பாடிய வாங்கன்னா வணக்கங்க நா பாடலை முதலில் கேட்டது அஜித் தான் என கூறியுள்ளார்.
மேலும் அந்த பாடலை கேட்ட அஜித் "இந்த பாடல் பெரிய ஹிட்டாகும் என்றும் இப்பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தும்" எனவும் கூறினாராம்.