அஜித் மேனன் மற்றும் அனில் வர்மா தொகுத்த "ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி" வெளியீடு

By Parthiban.A Nov 27, 2024 12:00 AM GMT
Report

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் முதல் பக்கத்திலேயே வாசகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போதே காட்சியை கண்கூடாக கற்பனை செய்து அந்த கதையின் சுகத்தை.. வாசிப்பு அனுபவத்தை ..உணரும் வகையில் கதை கரு இடம் பிடித்துள்ளது. எங்கள் வாசகர்கள்.. ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் தொடரின் முதல் தொகுதியை வாசித்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த புத்தகத்திற்கு பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும், ஆர்வமும் தருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

ட்ரு விஷன் கதைகள் என்பது எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் தொகுத்த ஆறு தொகுதிகளின் தொகுப்பாகும். இது திரைப்படத்திற்கான ' ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் வகையில் இந்திய கதைகளின் புதிய சகாப்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்திய திரைப்பட துறையின் கோரிக்கையை தொடர்ந்து உயர்தரமான ... உள்ளூர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அளவில் புகழ்பெற்ற பத்து எழுத்தாளர்களில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் ட்ரு விஷன் கதைகளை எழுதி இருக்கிறார். இதனை பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்து வழங்குகிறார். இந்த அற்புதமான ஆறாம் தொகுதிக்கான தொகுப்பில் இந்திய வாழ்க்கை கலாச்சாரம் மற்றும் அசலான நிகழ்வுகளின் செழுமையை படம் பிடித்திருப்பதுடன் சினிமாவுக்கான நடையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ' ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி' என குறிப்பிட்டிருக்கிறோம். இந்த தொடரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. அனார் என்டர்டெயின்மென்ட் மற்றும் பினாக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த தொடரின் கதைகளை தழுவி படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. இவர்களால் எழுதப்பட்டு பிரபலமான ஹிடன் அஜண்டாவின் முதல் நான்கு கதைகள் திரில்லர் வகையிலான தொடர்களாகும்.

இந்த புத்தகத்தை புகழ்பெற்ற சிருஷ்டி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பகம் ஆண்டுதோறும் ட்ரு விஷன் ஸ்டோரீஸ் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜானரிலான கதைகளை கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் 24 தனித்துவமான கதைக் களங்களை வழங்கி இருக்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வித்தியாசமான படங்களுக்கான கதை கருவினையும் வழங்கியிருக்கிறது. இந்த தொடரின் ஒவ்வொரு தொகுதியும் ஒரு சினிமாவை வாசிப்பது போன்ற அனுபவத்தை வழங்குவதற்காக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமான கதைகளை தயாரிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

''ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பக்கமும் ஒரு சினிமாவை நேரடியாக பார்த்த அனுபவத்தை உணர வைக்கும். இந்த புத்தகம் வாசகர்களுக்கு காட்சி வழியிலான கதை சொல்லலை கொண்டிருக்கிறது'' என்கிறார் எழுத்தாளர் அஜித் மேனன்.

இதில் உள்ள கதைகளை தொகுத்திருக்கும் பாடலாசிரியர் அனில் வர்மா குறிப்பிடுகையில், ''எங்கள் நோக்கம் இந்திய பார்வையாளர்களுக்கு திரைப்படம் தொடர்பாக இந்திய கலாச்சாரத்தை ஆழமாக எதிரொலிக்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஆகும் '' என்கிறார்.

அஜித் மேனன் மற்றும் அனில் வர்மா தொகுத்த "ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி" வெளியீடு | Ajit And Anil True Vision Series Hidden Agendas

ட்ரு விஷன் கதைகளுடன் அஜித் மேனனும், அனில் வர்மாவும் 2023 ஆம் ஆண்டில் தொடங்கிய 'தி பாந்தர்'ஸ் கோஸ்ட்' எனும் புத்தகத் தொடரின் வெற்றியை இதிலும் தொடர்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் வாசிக்கக்கூடிய.. வாசிக்க வேண்டிய சிறந்த 15 புத்தகங்களில்.. இரண்டு சிறந்த விற்பனையான தொகுதிகளுடன்... இந்திய இலக்கியம் மற்றும் சினிமாவின் இவர்களது தாக்கம் குறித்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது புத்தகம் ஜனவரி 2025 ஆம் ஆண்டில் வெளியாகிறது.‌

அனார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொலைநோக்கு திட்டம் மூலம் இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து 30 வருடம் அனுபவம் உள்ள பிரேம் மேனன் மற்றும் திரைப்படத் துறையில் 24 வருடம் அனுபவமுள்ள கண்ணன் ஆகியோர் இந்த அசாதாரணமான திரை கதைகளை இந்திய சினிமாவிற்கு ஏற்ற வகையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இது கலாச்சார ரீதியாக வளமாக உள்ள உள்நாட்டு கதை சொல்லலை புதிய உயரத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வில் 'ஏசியா வில்லே' எனும் டிஜிட்டல் தளத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம்! இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகத்தின் பி டி எப் பதிப்பை பிரேம் மேனன் இணையம் வழியாக அனுப்பியிருந்தார்.

இந்த தருணம் அற்புதமான மாற்றத்திற்கான தருணம். சினிமாவை பற்றிய கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இது போன்ற புத்தகங்கள் நேர் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டது.

தற்போது திரைத்துறை பெரும் பாய்ச்சலை கொண்டிருக்கிறது. அதன் வணிக எல்லைகள் விரிவடைந்திருக்கிறது. டிஜிட்டல் தளங்கள் என திரைப்படத்திற்கான சந்தைகளும் புதிதாக உருவாகி இருக்கிறது. ஒரு மொழியில் உருவாக்கி அதனை பல மொழியில் வெளியிடுவதற்கான சாத்தியமும் ஏற்பட்டிருக்கிறது.

புதிதாக வரும் இளம் படைப்பாளிகள் வித்தியாசமான படைப்பு சிந்தனையுடன் களம் இறங்குகிறார்கள். உதாரணத்திற்கு மஞ்சுமோள் பாய்ஸ் - வாழை போன்ற படங்களை குறிப்பிடலாம். இத்தகைய படங்கள் குறைந்த முதலீட்டில் உருவாகி, 60 கோடி 70 கோடி என வசூலிக்கிறது. எனவே இது மாற்றத்திற்கான தருணம் என குறிப்பிடுகிறேன். இதற்கான அடித்தளத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது.

இதனை எழுதிய அஜித் மேனன்- அனில் வர்மா தங்களின் அனுபவத்தை சினிமா மொழியில் எளிதாக எழுதி இருக்கிறார்கள். அஜித் மேனன் -அனில் வர்மா -அனார் என்டர்டெயின்மென்ட் - என மூன்று' A 'களும் ஒன்றிணைந்திருக்கிறது. 

இது ஒரு நல்லதொரு கூட்டணி. என்னுடைய அனுபவத்தில் அண்மையில் சோனி நிறுவனத்திற்காக ஒரு கதையை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத்தியிருக்கிறேன். கதைதான் முதலில் வலிமையாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது. நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர். ஊடகம் என்பது எது சாத்தியம் என்பதை சொல்லக்கூடியது. உண்மையை உரக்க சொல்லக்கூடியது. ஆனால் கதை என்பது வேறு.

அஜித்திடம் ஏன் புத்தக வெளியீட்டிற்காக சென்னையை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டபோது.. தமிழ் மொழியின் தொன்மையை பற்றி விளக்கினார். தற்போது மலையாளம் திரையுலகிலிருந்தும் ஏராளமான இளம் படைப்பாளிகள் புதிய சிந்தனையுடன் படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் ஏராளமான திறமைசாலிகள்.. தங்களின் படைப்புகளை வழங்கி வருவதை பார்க்கிறேன்.

கதை எழுதுவது என்பது சாதாரணமானதல்ல. அதற்காக கற்பனை மட்டும் போதாது. அதற்கு நிறைய திறமைகளும்.. துறை சார் அறிவுகளும்.. அனுபவங்களும் வேண்டும். அப்போதுதான் வித்தியாசமான கதைகளை எழுத முடியும். புத்தகம் வெளியிடுவது, எழுதுவது என்பது ஒரு தொழிலாக உயர்ந்து வருகிறது. அதனால் இளம் திறமையாளர்கள் தங்களுடைய எண்ணங்களையும், கற்பனைகளையும் புத்தகமாக வெளியிடுவதற்கு முன் வர வேண்டும். எழுத்தின் வழியாக கதை சொல்வதும் ஒரு தனித்திறமை தான்.

'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் இந்த புத்தகம் ஒரு வெற்றிகரமான நூல் . இந்தப் புத்தகத்தை வெளியிடுவதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். இந்த புத்தகத்திற்கு ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலக ஆர்வலர்களும் ஆதரவு தருவார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் ராம்குமார் கணேசன் பாலிவுட் தயாரிப்பாளர் திரிநாத் மல்ஹோத்ரா தமிழ் பட தயாரிப்பாளர்கள் டி .சிவா மற்றும் தனஞ்ஜெயன், என்னுடைய நண்பர் பிரேம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

அனார் என்டர்டெயின்மென்ட் கண்ணன் பேசுகையில், '' ஒரு நல்ல கதை.. அதற்கு ஏற்ற திரைக்கதை இருந்தால்தான்.. அந்த சினிமா பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறும். சிருஷ்டி பதிப்பகத்தார்கள் இன்று நம்பிக்கையுடன் 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் விசயம். அனார் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருஷ்டி பதிப்பகம் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளை வரவேற்க காத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நான் தமிழ் திரையுலகை உற்று கவனித்து வந்த ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் என்பது ஏழு முதல் எட்டு சதவீதம் தான் இருக்கிறது. அதாவது 200 முதல் 225 படங்கள் தமிழில் வெளியானால் அதில் 15 முதல் 16 படங்கள் தான் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிறது. இதற்கான முதன்மையான காரணம் என்ன என்று உள்ளார்ந்து கவனித்தால்.. கதை.

கதை சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் திரைக்கதையும் பொருத்தமாக இருக்க வேண்டும். இது இரண்டும் பலவீனமாக இருந்தால் அந்தத் திரைப்படம் சுமாராகத்தான் இருக்கிறது. தமிழ் திரையுலகத்திற்கு ஏராளமான புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள்.. அவர்களுக்கு கதை தேர்வு விசயத்தில் மட்டும் தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை அமைத்து வழிகாட்டினால்.. தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.

தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய பேசு பொருள் என்னவென்றால்.. சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்கள் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் தளங்களில் விற்பனையாவதில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் பலவீனமான கதை தான். கதையை சீராக்கினால் தான் மற்ற அனைத்தும் சீராகும். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100 திரைப்படங்கள் விற்பனை செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு குறைந்தபட்சம் மூன்று கோடி என்று வைத்துக் கொண்டாலும்.. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் தமிழ் சினிமாவில் வியாபாரமாகாமல் முடங்கி இருக்கிறது.

இங்கு வருகை தந்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள்.. நீங்கள் இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து கதை தொடர்பாக ஆலோசனையும், வழிகாட்டுதலையும் வழங்க வழி வகை செய்ய வேண்டும். இதனால் தமிழ் சினிமாவில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கலாம். இந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் புத்தகத்தை தயாரிப்பாளர்களும் வாசிக்க வேண்டும். ஏராளமான புதிய தலைமுறை படைப்பாளிகள் வரவேண்டும். அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US