பாலகிருஷ்ணாவின் சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித்.. விரைவில் அறிவிப்பு
ஏகே 63
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது.

ஆனால், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதில்லையாம்.
புதிய கூட்டணி
பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் வீர சிம்ஹா ரெட்டி எனும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் கோபிசந்த் தான் அஜித்துடைய 63வது படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் ஏகே 63 படத்தை தயாரிக்கவுள்ளார்களாம். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைப்பாளர் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.