என்னது அஜித்தின் 65வது படத்தை இந்த இயக்குனர் இயக்க வாய்ப்பு உள்ளதா?.. புதிய கூட்டணி
நடிகர் அஜித்
சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் எல்லா விஷயங்களையும் உடைத்து தனி வழியில் பயணித்து வருகிறார் அஜித்.
பல வருடங்களுக்கு பிறகு தனக்கு பிடித்த கார் ரேஸில் களமிறங்கியுள்ளவர் போட்டிபோடும் இடமெல்லாம் ஜெயித்து வருகிறார்.
கார் ரேஸில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கமிட்டான படங்களை வேகமாக முடித்து ரேஸ் முடியும் வரை எந்த படங்களிலும் கமிட்டாக கூடாது என இருக்கிறார்.
ஆனால் அஜித்தின் 64வது படத்தை குட் பேட் புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துவிட்டன.
அஜித்தின் 65
இந்த நேரத்தில் தான் அஜித்தின் 65வது படத்தின் தகவல் கசிந்துள்ளது.
அதாவது சமீபத்தில் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை அஜித்திற்கு பிடித்து போக ஓகே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ரசிகர்கள் இந்த புதிய கூட்டணி அமையுமா என இப்போதே ஆர்வமாகிவிட்டனர்.