நடிகர் அஜித்தை பெரிதும் பாதித்த மோசமான விமர்சனம் ! அவரே அளித்த பேட்டி..
மாஸ் காட்டிய வலிமை
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதன்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படம் தற்போதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூடிட்ங் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதனிடையே நடிகர் அஜித் தனது ப்ரோமோஷன் மட்டுமின்றி எந்தஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருபவர்.
ஆனால் பல வருடங்களுக்கு முன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி பேட்டிகளையும் அளித்து வந்தார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரை பெரிதும் பாதித்த விமர்சனம் குறித்து பேசியிருந்தார்.
அஜித்தை பாதித்த விமர்சனம்
"படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேனு கமெண்ட் அடிக்கிறாங்க 15 ஆபரேஷன்களுக்கு பிறகு எனது metabolism-மே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம். அதை நினைச்சு நான் சந்தோஷபடுறேன்.
நான் நல்ல டான்சரா இல்லாம இருக்கலாம், ஆனால் முயற்சி பண்றேன், இவ்வளவு சிகிச்சைகளுக்கு பிறகும் ஹெலிகாப்டர்-ல இருந்து குதிக்கிறேன், சண்டை போடுறேன். ஆனா தொடர்ந்து எனது பர்சனல் தோற்றத்தை கிண்டல் பண்றது வருத்தமா இருக்கு" என பேசியுள்ளார்.

முக்கிய நடிகை வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா !