அரசியல் சர்ச்சைக்கு நடிகர் அஜித் அதிரடி பதில்
நடிகர் அஜித் தற்போது படங்கள் மற்றும், பைக் ரைட் என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போவதாக தகவல் ஒன்று வெளியானது.
ஆனால், அஜித் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டார் என்று உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள இந்த பதிவில் " திரு அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ". என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடிகர் அஜித்துக்கு அரசியலில் களமிறங்கும் எண்ணம் துளி ஆளவும் இல்லை என்று தெளிவாக தெரிந்துவிட்டது.
"Mr Ajith kumar has got no intentions of venturing into politics and hence humbly requests the respected members of the media to refrain from encouraging such misleading informations".https://t.co/vILUFO8HCI
— Suresh Chandra (@SureshChandraa) March 1, 2022