சூர்யாவின் கங்குவா பட காட்சிகளை பார்த்த நடிகர் அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
சூர்யாவின் கங்குவா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் ரசிகர்களிடம் மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
அப்படி ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் ஹாலிவுட் கலைஞர்கள் படத்திற்கு பணியாற்றி வருகிறார்கள்.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் தகவல்
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, கங்குவா படத்தின் சில காட்சிகளை நடிகர் அஜித் பார்த்து மகிழ்ந்தார், இயக்குனர் சிவாவை பாராட்டியுள்ளார்.
அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பார் என கூறியுள்ளார்.
