தீபாவளியை டார்கெட் செய்யும் நடிகர் அஜித்.. ஒரே நேரத்தில் மோதவுள்ள முன்னணி நடிகர்களின் படங்கள்
AK 61
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் AK 61. போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இவர் இதற்குமுன் தமிழில் வெளிவந்த தனுஷ் நடித்து வெளிவந்த அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் AK 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
தீபாவளிக்கு அஜித் படம்
இந்நிலையில், இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட அஜித் முடிவெடுத்துள்ளதாகவும், அதில் உறுதியாக அவர் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் முடிவு செய்து வைத்துள்ள அதே நாளில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும் திரைக்கு வருகிறது. இதன்முலம் அஜித், கார்த்தி இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
