நடிகை ரோஜாவின் கல்யாணத்தில் அஜித் ஷாலினி! வைரலாகும் புகைப்படம்
90 -களில் பிரபல நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர், 1992 -ஆம் ஆண்டு "செம்பருத்தி" என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சின்னத்திரை ஷோக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்த ரோஜா, சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
வைரல் புகைப்படம்
2002ல் ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண விழாவில் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஜோடியாக ரோஜாவின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் அஜித் குமார் ஸ்டைலாக இருக்கிறார் என அவரின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஜனனி போட்ட பதிவு- இதோ பாருங்க