கண்ட நாயெல்லாம்.. பேட்டியில் தயாரிப்பாளரை திட்டிய அஜித்! அவரா இப்படி பேசியது?
அஜித்
தற்போதைய இளம் தலைமுறைக்கு அஜித் என்றால் எப்போதும் அமைதியானவர், எந்த பிரச்சனைக்கும் போகமாட்டார், பேட்டி கூட கொடுக்க மாட்டார் என்று தான் தெரியும்.
அஜித் தற்போது தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார், எல்லோருக்கும் மரியாதை கொடுத்து அன்பாக நடந்துகொள்வார். ஆனால் அஜித் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் வேறு விதமாக தான் இருந்திருக்கிறார்.
மாற்றம்
அஜித் பேட்டிகளில் தான் நினைப்பதை ஓப்பனாக பேசி பல நேரங்களில் சர்ச்சைகளில் கூட சிக்கி இருக்கிறார்.
"அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் என செல்வதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அல்லது சினிமாவை விட்டு விட வேண்டும்" என பிரபல தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை அட்வைஸ் கொடுத்தாராம்.
அதற்கு ஒரு பேட்டியில் பதில் கொடுத்த அஜித், 'கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய தேவை இல்லை' என கூறி இருக்கிறார். ஒருகாலத்தில் இப்படி இருந்த அஜித் தான் தற்போது மொத்தமாக இப்படி மாறி இருக்கிறார்.
அது இல்லனா.. கோடீஸ்வரனாக இருந்தாலும் வேண்டாம்: பிரேக்கப் செய்த நடிகை தர்ஷா குப்தா