கோவிலில் மகள் உடன் நடிகர் அஜித்.. ரசிகர்களுக்காக செய்த விஷயம்! வைரல் வீடியோ
நடிகர் அஜித் கார் ரேஸில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படமான AK 64 இன்னும் தொடங்கப்படாமல் தான் இருக்கிறது. குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.
அதனால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது. மறுபுறம் அஜித் எப்போது இதன் ஷூட்டிங்கை தொடங்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கேரள கோவிலில் அஜித்
இந்நிலையில் அஜித் இன்று கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் மகள் உடன் அந்த கோவிலுக்கு சென்று இருந்தார்.
Ajith Kumar visited oottukulangara temple at Palakkad today 😍#palakkad #AjithKumar pic.twitter.com/BsExHf8v4A
— ഏമാൻ....... (@m_visakh) December 30, 2025
கிளம்பும்போது அஜித் தனது ரசிகர்களுக்காக என்ன செய்திருக்கிறார் என தெரியுமா. அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டது மட்டும் அல்லாமல், போகும் போது எல்லோருக்கும் இதய குறியீட்டை கைகளால் காட்டிவிட்டு சென்றார்.
