ரீ-ரிலீஸ் ஆகியுள்ள அட்டகாசம் திரைப்படம் 4 நாளில் செய்துள்ள வசூல்... முழு விவரம்
அட்டகாசம்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் பழைய ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் டிரெண்ட் இப்போது உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அஜித்தின் அட்டகாசம் படம் மீண்டும் ரிலீஸ் ஆகியிருந்தது. கடந்த 2004ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கிய படம் என்றே கூறலாம். 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது படம் வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி அன்று ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி அமர்க்களம் செய்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்
அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இப்பட ரீ-ரிலீஸ் அமைந்துள்ளது என்றே கூறலாம்.
இப்போது ரசிகர்கள் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால், வீரம், வேதாளம் ஆகிய படங்களையும் மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்கின்றனர். வரும் காலங்களில் நடக்குமா என்பதை பார்ப்போம்.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் அட்டகாசம் படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 95 லட்சம் வரை வசூலித்துள்ளதாம்.