தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கும் அஜித் ! AK61 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி..
தள்ளிப்போகும் அஜித்தின் திரைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அவருடன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது படப்பிடிப்பை முடித்துள்ளதால் அவர் தனது பைக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட அஜித் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே AK61 திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இன்னும் அதன் அறிவிப்பு எதும் வெளியாகாமல் உள்ளது. மேலும் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது அஜித்தின் AK61 திரைப்படம் தீபாவளியில் வெளியாகாது என்றும், வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிற்பதாக தகவல் பரவி வருகிறது.
இது குறித்த அதிகாரபூர்வமாக தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாக சைத்தன்யா இரண்டாவது திருமணம் குறித்து வந்த தகவல்- கோபமாக சமந்தா போட்ட பதிவு