பைக் டூர் ஆரம்பித்து அஜித் இதுவரை செய்த இடங்கள்- அடுத்து எங்கே செல்கிறார், முழு விவரம் இதோ
அஜித்தின் கனவு
தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி தனது கனவுகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டி வருபவர் நடிகர் அஜித். சமையல், தோட்ட வேலை, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல், கார், பைக் ரேஸ், விமானம் ஓட்டுதல் என நிறைய விஷயங்களில் அஜித் கலக்கி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக அவர் பைக்கில் உலகம் சுற்றுவ்தில் இருக்கிறார்.
அவருடன் பைக்கில் பயணம் செய்ய விரும்பும் சிலர் பயணித்து வருகின்றனர்.
சுப்ரஜ் பதிவு
அஜித்துடன் பைக்கில் உலகம் சுற்றுபவர்களில் ஒருவர் சுப்ரஜ். இவர் அவ்வப்போது அஜித்துடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
தற்போது அஜித் எப்போது பயணத்தை தொடங்கினார், அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் போன்ற விஷயங்களை பதிவு செய்துள்ளார். இதோ,
#AjithKumar #ak #worldtour update #akmotorcyclediaries pic.twitter.com/wz1bEXSCLH
— Suprej Venkat (@suprej) September 15, 2022
வெந்து தனிந்தது காடு எப்படியிருக்கு..Live Updates