நடிகர் அஜித் வாங்கிய புது ferrari கார்.. விலை இத்தனை கோடியா
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஒருபக்கம் நடந்தாலும் அதில் கிடைக்கும் இடைவெளியில் கார் ரேஸிங், டெஸ்டிங் போன்ற விஷயங்களிலும் அஜித் ஈடுபட்டு வருகிறார். அதன் வீடியோக்களும் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வைரல் ஆனது.
அஜித் கார் ரேஸிங் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் பல விதமான கார்களையும் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்.

புது Ferrari கார்
தற்போது அஜித் ஒரு புது Ferrari காரை பல கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Ferrari SF90 Stradale என்ற கார் உடன் அஜித் இருக்கும் போட்டோவும் வெளியாகி படுவைரல் ஆகி உள்ளது. அந்த காரின் ஆன் ரோடு விலை சுமார் 9 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை News Lankasri