அரசியலில் களமிறங்கும் விஜய்.. போட்டிக்கு வரும் அஜித்
விஜய் அரசியல்
திரையுலகில் இருந்து அரசியலில் பலரும் களமிறங்கியுள்ளனர். இதில் சிலர் மட்டுமே வெற்றி வாகையை சூட்டினார்கள். இவர்களின் வழியில் தற்போது தளபதி விஜய்யும் அரசியலில் களமிறங்க இருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து தான் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கிறது.

விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான், இல்லையில்லை அதுதான் என பல பெயர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இதுவரை விஜய் தரப்பில் இருந்து அரசியல் கட்சியின் பெயர் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. இப்படியிருக்க விரைவில் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவிட முடிவு செய்துள்ளாராம்.

விடாமுயற்சி First லுக்
சரி ஓகே, இதற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகிறதோ, அதே நாளில் விடாமுயற்சி படத்தின் First லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜய்யின் அரசியல் பேச்சு காட்டு தீ போல் பரவி கொண்டிருக்கும் நிலையில், அதை தண்ணீர் ஊற்றி அணைப்பதற்காக விடாமுயற்சி படத்தின் First லுக் வெளியாகும் என்பது போல் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி விடாமுயற்சி படத்தின் First லுக் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென தற்போது இப்படியொரு செய்தியை அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri