AK 64 படத்திற்காக அஜித் தேர்வு செய்துள்ள இயக்குனர் இவர்தானா?.. சூப்பர் கூட்டணி?
நடிகர் அஜித்
கார் ரேஸில் உயிராக உள்ள அஜித் அதற்கான போட்டிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களை வேகமாக நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.
இதில் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
அதற்கான வேலைகள் நடைபெற்று வர அஜித் கார் ரேஸில் செம பிஸியாக உள்ளார். வெளிநாட்டில் கார் ரேஸின் போது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்.
அடுத்த படம்
துபாயில் கார் ரேஸில் கலந்துகொண்ட போது அஜித் ஒரு பேட்டியில், அடுத்த வருட மார்ச் வரை ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும், படங்கள் பற்றி ரேஸ் முடிந்த பிறகே முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜித்தின் 64வது பட தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அஜித்தின் 64வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.