பைக் ரைடில் பிரியாணி செய்து அசத்தும் அஜித்.. வைரலாகும் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்திற்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதை தொடர்ந்து தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்த பைக் ரைடு சென்றுள்ளார்.

அங்கிருந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்தரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த பயணத்தில் நடிகர் அஜித்துடன் பிரபல நடிகர் ஆரவ்வும் கைகோர்த்துள்ளார். இருவரும் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாணி செய்த அஜித்
இந்த நிலையில், பைக் ரைடு சென்றுள்ள அஜித், அங்கு தன்னுடன் வந்த தனது நண்பர்கள் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி செய்து கொடுத்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ :
Video of Thala #Ajithkumar cooking Briyani to his friends..⭐ pic.twitter.com/VD1P9jDBTj
— Laxmi Kanth (@iammoviebuff007) March 21, 2024