17 வயதை எட்டிய அஜித்தின் மகள்.. குடும்பத்துடன் கொண்டாடி இருக்கும் பார்ட்டி புகைப்படம்
அஜித்-ஷாலினி
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் அஜித்-ஷாலினி முக்கியமானவர்கள். நடிகை ஷாலினி சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது, அஜித் - ஷாலினி தம்பதியர்களுக்கு ஆத்விக் என்ற மகன் மற்றும் அனோஷ்கா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமா பக்கமே ஷாலினி வரவில்லை.
குடும்ப புகைப்படம்
சமூக வலைதளங்களில் கூட இல்லாமல் இருந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தார். இந்நிலையில், அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா இன்று அவரது 17வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிநாட்டிற்குச் சென்றுள்ள அஜித் குடும்பம், அனோஷ்காவின் பிறந்த நாளை சிங்கப்பூரில் கொண்டாடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.