அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி அஜித் மற்றும் மகள் அனோஷ்கா.. வைரல் புகைப்படம்
ஐஸ்வர்யா - உமாபதி திருமணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்திற்கு திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வருகை தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
மகள் அனோஷ்கா
இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபகாலாமாக அஜித்தின் மகள் அனோஷ்காவின் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அண்மையில் கூட அவரிடம் அனுமதி பெறாமல் எடுத்த வீடியோ இணையத்தில் உலா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
