விஜயகாந்த் இறப்புக்கு போன் செய்து கூட துக்கம் விசாரிக்காத அஜித்.. பிரபலம் அதிர்ச்சி பேட்டி
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அதன் பின் அரசியலில் குதித்து அதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதன் பின் அவர் உடல்நலக்குறைவாக சில வருடங்கள் இருந்த நிலையில் 2023 டிசம்பர் 23ம் தேதி மறைந்தார்.
அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
போன் கூட செய்யாத அஜித்
இருப்பினும் ஒரு சில நடிகர்கள் ஊரில் இல்லாத காரணத்தால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் அதன் பின் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர் அஜித்தும் போன் செய்து துக்கம் விசாரித்தார் என அப்போது செய்தி பரவியது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என பிரபலம் ஒருவர் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.
பிரபல இயக்குனர் பாஸ்கர் என்பவரின் மகன் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் "அஜித் நேரில் வராதது மட்டுமின்றி, பிரேமலதாவுக்கு போன் செய்து கூட பேசவில்லை" என கூறி இருக்கிறார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
