பிரபல நடிகருக்கு போன் போட்டு பாராட்டிய அஜித்- எதற்காக, என்ன விஷயம், யாருக்கு போன் செய்தார் தெரியுமா?
நேற்று தீபாவளி ஸ்பெஷலாக ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் எல்லா இடங்களிலும் செம மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் தங்களது தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களையும் பதிவு செய்து ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
சில பிரபலங்கள் தீபாவளி ஸ்பெஷலாக பேட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தெலுங்கில் ஒரு ஸ்பெஷல் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், வலிமை டப்பிங் முடித்தவுடன் அஜித் அவர்கள் எனக்கு போன் செய்தார். இப்படி ஒரு சூப்பரான நடிப்பை நான் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை, மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள்.
நீங்கள் பெரிய இடத்தை எதிர்காலத்தில் பிடிப்பீர்கள் என அஜித் கூறியதாக கார்த்திகேயா கூறியுள்ளார்.