தனது தாய், தந்தையுடன் உணவு உண்ணும் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் வீடியோ
அஜித் - விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முழு படத்தையும் அங்கேயே எடுத்து முடித்து விடலாம் என படக்குழு திட்டம்போட்டுள்ளார்களாம்.
அன்ஸீன் வீடியோ
அஜித்தின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது தாய் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து அஜித் உணவு சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த அன்ஸீன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த சில மாதங்களுக்கு உடல்நல குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
Rare Video of #AjithKumar with his parents ❤️. pic.twitter.com/4virGBu6gB
— THALA AJITH (@ThalaAjith_Page) October 23, 2023