அஜித் ரசிகர்கள் மன்றத்தை கலைத்த அறிக்கையை எழுதியதே இந்த பிரபல இயக்குனர் தானாம்
61-வது படத்தில் பிஸியான அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.
இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, மேலும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மன்றம் குறித்த சுரவாரஸ்யமான தகவல்
இந்நிலையில் அஜித் அப்போதே ரசிகர்களின் தனக்காக வைக்கப்பட்ட ரசிகர்கள் மன்றத்தை கலைத்திருந்தார். இந்த விஷயம் இப்போதும் ரசிகர்களை கவலையடைய செய்யும் ஒன்று.
மேலும் அஜித்தை வைத்து பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இது குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் அஜித் ரசிகர்கள் மன்றத்தை கலைக்க வெளியிட அறிக்கையை அவர் சொல்லச்சொல்ல தான் அதை எழுதியதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இது போன்ற அஜித் முடிவுகளை அஜித் யார் என்ன சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார். மேலும் அமர்க்களம் திரைப்படம் வெளியான அந்த இரவே அஜித் 25,000 ரசிகர்கள் மன்றம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் என்ன செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது ! - ரசிகர்களின் மன குமுறல்..