சிறுத்தை சிவா அஜித் பிறந்தநாளுக்கு போட்ட ட்விட்! AK63 உறுதியா?

By Parthiban.A May 01, 2022 09:00 AM GMT
Report

இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியவர். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அவர்கள் கூட்டணியில் தொடந்து நான்கு படங்கள் உருவானது. அதில் விஸ்வாசம் குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

அதனை தொடந்த்து சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனை அடுத்து அவர் அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார்.

சிவா அஜித்தின் 63வது படத்தினை இயக்க போகிறார் என கடந்த ஒரு வாரமாக தகவல் வெளியாகி வருகிறது. அதை அவரே ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டியில் சொன்னதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு சிறுத்தை சிவா ட்விட்டரில் வாழ்த்து கூறி இருக்கிறார்.

அவரிடம் அஜித் ரசிகர்கள் தற்போது AK63 படம் பற்றிய அறிவிப்பை கேட்டு வருகின்றனர். அந்த படம் விஸ்வாசம் போல ஹிட் ஆகும் வகையில் எடுத்து கொடுங்க என்றும் கேட்டு வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US