AK 61ல் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.. வருத்தமளிக்கும் புகைப்படங்கள்
AK 61
எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக அஜித் புதிய லுக் மற்றும் தனது உடல் எடையில் 25 கிலோ குறைவுள்ளார் என்று தகவல் வெளியானது.
மேலும், அதில் 10 கிலோ தற்போது வரை குறைத்துள்ளதாகவும், மீதம் உள்ள 15 கிலோ எடையை வரும் நாட்களில் குறைவுள்ளார் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், AK 61 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் தற்போது புறப்பட்டு சென்றுள்ளார்.
வருத்தத்தில் ரசிகர்கள்
அவர் படப்பிடிப்பு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்களுக்கு வருத்தமளித்து வருகிறது.
ஏனென்றால், நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், அவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனால், அப்படத்தில் அஜித்துக்கு 5 கெட்டப் இருக்கிறது என்று கூறுகின்றனர். அதனால், அதில் ஒரு கெடப்பாக இந்த லுக் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலையில் முடி இல்லாமல் நிக்கி கல்ராணி சகோதரி! போட்டோவால் அனைவரும் ஷாக்