வலிமை சூப்பர் அப்டேட்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் டீஸர் ட்ரைலர் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எப்போ தான் ப்ரோமோஷன் தொடங்குவீங்க என தயாரிப்பாளர் போனி கபூரை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் விசில் தீம் இன்று 3.30 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யுவனின் தீம் மியூசிக் எப்படி இருக்க போகிறது என பெரிய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வலிமை படக்குழுவினர் இனி தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்வார்கள் என்பதால் அஜித் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
#WhistleTheme from #Valimai to get you hooked ! ??
— Sony Music South (@SonyMusicSouth) December 22, 2021
3️⃣:3️⃣0️⃣ PM TODAY! ??
RT and let the world know! ?#AjithKumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @thisisysr @ZeeStudios_ @SureshChandraa#ValimaiPongal #Valimai